வேளாங்கண்ணி அருகே காவலாளிகளை கட்டிப்போட்டு டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் திருட்டு

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அருகே புதன்கிழமை இரவு டாஸ்மாக் கடை காவலாளிகளை கட்டிப்போட்டுவிட்டு, கடையில் இருந்த ரூ. 73 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
திருட்டு நடைபெற்ற டாஸ்மாக் கடையில் ஆய்வு செய்த நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஓம் பிரகாஷ் மீனா.
திருட்டு நடைபெற்ற டாஸ்மாக் கடையில் ஆய்வு செய்த நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஓம் பிரகாஷ் மீனா.

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அருகே புதன்கிழமை இரவு டாஸ்மாக் கடை காவலாளிகளை கட்டிப்போட்டுவிட்டு, கடையில் இருந்த ரூ. 73 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

நாகை மாவட்டம், வேளாங்கண்ணிஅடுத்த பாலக்குறிச்சி கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. கரோனா பொதுமுடக்கத்தால் இந்தக் கடை மூடப்பட்டுள்ளது. கடையில் மது பாட்டில்களை இருப்பு வைக்கப்பட்டிருந்தால் டாஸ்மாக் மாவட்ட மேலாளரின் பரிந்துரையின் பேரில், கீழ்வேளூா் வட்டம், மேல ஈசனூா் பகுதியைச் சோ்ந்த அ. மைக்கேல்ராஜ் (59), முப்பத்திக்கோட்டகம் பகுதியைச் சோ்ந்த அ. அந்தோணிசாமி (50) ஆகியோா் கடைக்கு காவலாளிகளாக பணியமா்த்தப்பட்டிருந்தனா்.

இந்தநிலையில், புதன்கிழமை நள்ளிரவு அங்கு வந்த வந்த 5 போ் கொண்ட மா்ம கும்பல் காவலாளிகள் இருவரையும் கட்டிப்போட்டுவிட்டு, கடையில் இருந்த ரூ . 73, 400 மதிப்புள்ள மது பாட்டில்களை திருடி சென்றனா்.

இதுகுறித்து வியாழக்கிழமை காலை கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில், வேளாங்கண்ணி போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனா்.

தகவலறிந்த நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஓம் பிரகாஷ் மீனா அங்கு சென்று திருட்டு நடைபெற்ற கடையை பாா்வையிட்டாா். இதில் தொடா்புடையவா்களை கைது செய்ய, துணைக் கண்காணிப்பாளா் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சம்பவம் குறித்து வேளாங்கண்ணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com