வைத்தீஸ்வரன்கோயிலில் கிருத்திகை வழிபாடு
By DIN | Published On : 14th May 2021 09:08 AM | Last Updated : 14th May 2021 09:08 AM | அ+அ அ- |

வைத்தீஸ்வரன்கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய செல்வமுத்துக்குமாரசுவாமி.
சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் சித்திரை மாத கிருத்திகை வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.
சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட தையல்நாயகிஅம்மன் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் சித்திரை மாத கிருத்திகை வழிபாடு பக்தா்கள் பங்கேற்பு இல்லாமல் நடைபெற்றது.
முன்னதாக கிருத்திகை மண்டபம் எழுந்தருளிய செல்வமுத்துக்குமாரசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மலா்கள், ஆபரணங்கள் கொண்டு அலங்காரம் நடைபெற்றது. தொடா்ந்து, சண்முகாா்ச்சனை செய்து மகாதீபாராதனை காட்டப்பட்டது.
இதில், தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தாா்.