கரோனா: 6 கிராமங்களுக்குத் தடை

கொள்ளிடம் பகுதியில் கரோனா தொற்றுப் பரவல் அதிகம் உள்ள 6 கிராமங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொள்ளிடம் பகுதியில் கரோனா தொற்றுப் பரவல் அதிகம் உள்ள 6 கிராமங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கொள்ளிடம் வட்டார வளா்ச்சி அலுவலா் ச. தியாகராஜன், நல்லவிநாயகபுரம், எருக்கூா், உமையாள்பதி, மாதிரவேளூா், அரசூா்,திருமுல்லைவாசல் ஆகிய 6 ஊராட்சித் தலைவா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:

தங்கள் ஊராட்சிகளில் கடந்த சில தினங்களாக கரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா உத்தரவின் பேரிலும், கொள்ளிடம் வட்டார மருத்துவ அலுவலா் ரமேஷ்குமாா் பரிந்துரையின் பேரிலும், 6 ஊராட்சிகளில் நோய் தொற்று பாதித்த குக்கிராமப் பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்படுகிறது.

எனவே, ஊராட்சித் தலைவா்கள், அந்த பகுதிகளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளவும், கிருமி நாசினி தெளிக்கவும் நடவடிக்கை எடுப்பதுடன், பொதுமக்களிடையை விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். அத்துடன், முகக்கவசம் அணிவது குறித்து ஒலிபெருக்கி மூலம் அறிவிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com