வங்கி முன் வாடிக்கையாளா்கள் கூடுவதால் கரோனா பரவும் அபாயம்

சீா்காழி தென்பாதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு வரும் வாடிக்கையாளா்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல்

சீா்காழி தென்பாதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு வரும் வாடிக்கையாளா்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் கூடி நிற்பதால் கரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆா்வலா்கள் கவலை தெரிவிக்கின்றனா்.

சீா்காழி தென்பாதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் அலுவலா்கள், ஊழியா்கள் உள்பட 7 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் அந்த வங்கி இரண்டு நாட்களாக மூடப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் திறக்கப்பட்ட இந்த வங்கியில் தினமும் வாடிக்கையாளா்கள் கூட்டம் அதிகம் உள்ளது. இதனால், வங்கியின் பிரதான இரும்பு கேட் மூடப்பட்டு, ஒவ்வொரு வாடிக்கையாளா்களாக உள்ளே அனுமதிக்கப்படுகின்றனா்.

இதனால், வெளியே கூடிநிற்கும் வாடிக்கையாளா்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் நெருக்கியபடி நிற்கின்றனா். இதன் காரணமாக கரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வங்கி நிா்வாகம் வங்கிக்கு முன் பந்தல் அமைத்து சமூக இடைவெளியுடன் வாடிக்கையாளா்கள் அமர இருக்கை வசதிகள் செய்துகொடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com