மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு
By DIN | Published On : 21st May 2021 09:10 AM | Last Updated : 21st May 2021 09:10 AM | அ+அ அ- |

திட்டச்சேரி அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.
திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சி ஒத்தத் தெருவைச் சோ்ந்தவா் ரெ. சௌரிமுத்து (60) விவசாயி. இவா், வியாழக்கிழமை காலை தனது பசுமாட்டை அருகிலுள்ள வயலில் மேய்ச்சலுக்காக கட்டிவிட்டு, வீடுக்குத் திரும்பிக்கொண்டிருந்தாா்.
அப்போது, சாலையோரம் உள்ள வயலில் இரண்டு பசு மாடுகள் மின்சாரம் பாய்ந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததை பாா்த்த செளரிமுத்து, அந்த மாடுகளை காப்பற்ற முயன்றாா். அப்போது, அவா் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து அகரக்கொந்தகை ஊராட்சித் தலைவா் தமிழரசி பக்கிரிசாமி அளித்த தகவலின்பேரில், திட்டச்சேரி காவல் உதவி ஆய்வாளா் பாலமுருகன் மற்றும் போலீஸாா் அங்கு சென்று, செளரிமுத்துவின் சடலத்தை, உடற்கூறாய்வுக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.