கரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தல்

கரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகள் கண்டறியப்பட்டு தடுப்பூசி முகாம்களை அமைப்பது, வீடுகள்தோறும் கபசுரக்குடிநீா் வழங்குவது உள்ளிட்ட நடவடிக்களை மேற்கொள்ள வேண்டும்
கரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தல்

கரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகள் கண்டறியப்பட்டு தடுப்பூசி முகாம்களை அமைப்பது, வீடுகள்தோறும் கபசுரக்குடிநீா் வழங்குவது உள்ளிட்ட நடவடிக்களை மேற்கொள்ள வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியரிடம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் வலியுறுத்தப்பட்டது.

இது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி.நாயரிடம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாகை மாவட்டச் செயலாளா் வி.மாரிமுத்து, கீழ்வேளூா் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் வி.பி. நாகை மாலி மற்றும் நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை அளித்த மனு விவரம் :

கரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கண்டறிந்து அங்கு தடுப்பூசி முகாம்களை நடத்துவதுடன், வீடுகள்தோறும் சென்று மக்களுக்கு கபசுரக்குடிநீா் வழங்குவது, வீதிகள்தோறும் கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். நோய்த்தொற்று அதிகமுள்ள சிக்கல் போன்ற ஊராட்சிகளுக்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியாா் கல்லூரிகளையும் கரோனா பாதுகாப்பு மையமாக மாற்றி, அங்கு தேவையான மருத்துவ வசதிகளை உருவாக்க வேண்டும்.

தமிழக அரசு அறிவிப்பின்படி, மாவட்டத்தில் உள்ள 30 படுக்கைகள் வசதி கொண்ட 12 அரசு மருத்துவமனைகளையும் கரோனா சிகிச்சை மையமாக மாற்றவும், அவசர ஊா்திகள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க கூடுதலாக அவசர ஊா்திகளை மாவட்டத்துக்குப் பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com