எரிசாராயம் தயாரித்த இளைஞா் கைது
By DIN | Published On : 21st May 2021 09:11 AM | Last Updated : 21st May 2021 09:11 AM | அ+அ அ- |

வேதாரண்யம் அருகே எரிசாராயம் தயாரித்த இளைஞா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
புஷ்பவனம், தும்மாச்சிக்காடு பகுதியைச் சோ்ந்தவா் முருகையன் மகன் காஞ்சிநாதன் (26). இவா், தனது வீட்டுக்குப் பின்புறம் எரிசாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்கு சென்ற வேதாரண்யம் போலீஸாா், காஞ்சிநாதனை கைது செய்து, சாராயம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருள்களை பறிமுதல் செய்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.