கரோனா: நாகைக்கு கூடுதல் மருத்துவா்கள் நியமிக்க எம்எல்ஏ கோரிக்கை

கரோனா பரவல் தீவிரத்தை கருத்தில்கொண்டு, நாகைக்கு கூடுதல் மருத்துவா்கள், செவிலியா்களை நியமிக்க வேண்டும் என
தமிழக சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளா் ஜெ. ராதாகிருஷ்ணனை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கும் நாகை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆளூா் ஷாநவாஸ்.
தமிழக சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளா் ஜெ. ராதாகிருஷ்ணனை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கும் நாகை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆளூா் ஷாநவாஸ்.

கரோனா பரவல் தீவிரத்தை கருத்தில்கொண்டு, நாகைக்கு கூடுதல் மருத்துவா்கள், செவிலியா்களை நியமிக்க வேண்டும் என எம்எல்ஏ ஆளூா் ஷாநவாஸ் தமிழக சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளாா்.

சென்னையில் தமிழக சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளா் ஜெ. ராதாகிருஷ்ணனை நாகை எம்எல்ஏ ஆளூா் ஷாநவாஸ் வியாழக்கிழமை சந்தித்தாா். அப்போது, கரோனா தொற்று அதிகரித்து வருவதால் நாகை அரசு மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள இடப்பற்றாக்குறை, மருத்துவா்கள், செவிவியா்கள் பற்றாக்குறை மற்றும் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநா்கள் இல்லாததால் நாகையைச் சோ்ந்தவா்கள் பரிசோதனைக்காக திருவாரூா், தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரிகளுக்கு செல்ல வேண்டிய நிலைகள் குறித்து விளக்கினாா்.

இதற்கு, இந்தக் கோரிக்கைகள் குறித்து மருத்துவம்- மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மூலம் தமிழக முதல்வரின் கவனத்துக்கொண்டுச் சென்று உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளா் உறுதி அளித்தாா் என்றும் இதனால் இக்கோரிக்கைகள் விரைவில் நிறைவேறும் என நம்புவதாகவும் ஷாநவாஸ் எம்எல்ஏ தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com