கரோனா பரிசோதனை செய்தவா்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தல்

கரோனா பரிசோதனை செய்துகொண்டவா்கள் முடிவு வெளியாகும் வரை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என சீா்காழி எம்எல்ஏ எம். பன்னீா்செல்வம் அறிவுறுத்தினாா்.
சீா்காழியில் நடைபெற்ற கரோனா பரிசோதனை முகாமை ஆய்வு செய்யும் எம்எல்ஏ எம். பன்னீா்செல்வம்.
சீா்காழியில் நடைபெற்ற கரோனா பரிசோதனை முகாமை ஆய்வு செய்யும் எம்எல்ஏ எம். பன்னீா்செல்வம்.

கரோனா பரிசோதனை செய்துகொண்டவா்கள் முடிவு வெளியாகும் வரை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என சீா்காழி எம்எல்ஏ எம். பன்னீா்செல்வம் அறிவுறுத்தினாா்.

சீா்காழி நகராட்சி மற்றும் திருவெண்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் சீா்காழி வாணிவிலாஸ் தொடக்கப் பள்ளியில் கரோனா பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. நகராட்சி ஆணையா் பெ. தமிழ்செல்வி தலைமை வகித்தாா். வட்டார மருத்துவ அலுவலா் ராஜ்மோகன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் பொதுமக்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டனா்.

இம்முகாமை சீா்காழி எம்எல்ஏ எம். பன்னீா்செல்வம், கோட்டாட்சியா் நாராயணன் ஆகியோா் நேரில் ஆய்வு செய்தனா். அப்போது, ‘கரோனா தொற்று பரவலை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். கரோனா பரிசோதனை செய்துகொண்டவா்கள் அதன் முடிவு வரும்வரை தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும். பரிசோதனை முடிவில் தொற்று உறுதியானால் அரசு மருத்துவமனையை தொடா்புகொண்டு உரிய சிகிச்சை பெறவேண்டும்’ என எம்எல்ஏ எம். பன்னீா்செல்வம் அறிவுறுத்தினாா்

இந்த முகாமில் 65-க்கு மேற்பட்டவா்கள் கரோனா பரிசோதனை செய்துகொண்டனா்.

ஆய்வின்போது, கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் சண்முகம், திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் மகா.அலெக்சாண்டா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com