திருக்குவளை பகுதியில் மிதமான மழை
By DIN | Published On : 21st May 2021 09:06 AM | Last Updated : 21st May 2021 09:06 AM | அ+அ அ- |

திருக்குவளை பகுதியில் இடி, மின்னல் மற்றும் காற்றுடன் வியாழக்கிழமை இரவு மிதமான மழை பெய்தது.
திருக்குவளை, வலிவலம், கொளப்பாடு, சித்தாய்மூா், எட்டுக்குடி, திருவாய்மூா், வாழக்கரை, மேலவாழக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த இம்மழையால், மின் விநியோகம் நிறுத்தப்பட்டு, காற்றின் வேகம் குறைந்ததும், சுமாா் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு மின் வினியோகம் சீரானது.
கோடை உழவுப் பணி தற்போது முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், இந்த மழை பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனா்.