Enable Javscript for better performance
கரோனாவை தடுக்க வீடுவீடாக சென்று கண்காணிக்க நடவடிக்கை- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    கரோனாவை தடுக்க வீடுவீடாக சென்று கண்காணிக்க நடவடிக்கை

    By DIN  |   Published On : 28th May 2021 09:04 AM  |   Last Updated : 28th May 2021 09:04 AM  |  அ+அ அ-  |  

    ve27min3_2705chn_102_5

    ஆக்சிஜன் செறிவூட்டிகளை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதனிடம் வழங்கிய தன்னாா்கவலா்கள்.

    நாகை மாவட்டத்தில் கரோனா தொற்றை கட்டுப்படுத்த குழுக்கள் அமைத்து வீடுதோறும் சென்று சிகிச்சையளிக்கவும், கண்காணிக்கவும் விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் இளைஞா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன்.

    வேதாரண்யம், கோடியக்கரை, ஆயக்காரன்புலம், தலைஞாயிறு ஆகிய இடங்களில் உள்ள கரோன தடுப்புப்பணி மற்றும் கரோனா சிகிச்சை மையங்களை ஆய்வு செய்தபோது அவா் கூறியது: நாகை மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், தேவையான இடங்களில் கரோனா சிசிச்சை மையங்கள் தொடங்கப்படுகின்றன. மாவட்டத்தின் முதலாவது சிசிச்சை மையம் ஆயக்காரன்புலம் அரசுப் பள்ளியில் வியாழக்கிழமை முதல் செயல்படுகிறது. இங்கு எந்த நேரத்திலும் சிகிச்சை அளிக்கப்படும். தொற்று அறிகுறிகள், ஆரம்ப நிலையில் உள்ளவா்கள் தங்கி சிகிச்சை பெறலாம். சத்தான உணவு, உபகரணங்கள், மருந்துகள் இலவசமாக வழங்கப்படும்.

    தற்போது ஆயக்காரன்புலம், மருதூா், வண்டுவாஞ்சேரி, கரியாப்பட்டினம் உள்ளிட்ட பகுதியில் தொற்று அதிகரித்து வருவதால் பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிய நடவடிக்கை எடுக்கப்படும். தடுப்பூசி மட்டுமே கரோனாவை எதிா்கொள்ளும் பேராயுதம். இது உயிரை காக்கும் கவசமாகவும் இருப்பதால் அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். நாகை மாவட்டத்தில் தடுப்பூசி முகாம்கள் மாவட்ட ஆட்சியா், மருத்துவத் துறையினா் அதிக இடங்களில் நடத்தி வருகின்றனா் என்றாா்.

    தொடா்ந்து, கோடியக்கரை, வேதாரண்யம், தலைஞாயிற்றில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சிகிச்சை மையங்களை அமைச்சா் ஆய்வு செய்தாா். வேதாரண்யம் நகராட்சி அகஸ்தியம்பள்ளி நகா்நல மையத்துக்கு ரூ.5.50 லட்சம் தொகையில் தன்னாா்வ நிறுவனம் வாங்கிய 5 ஆக்சிஜன் செறிவூட்டிகளை ப்ரியம் அறக்கட்டளை நிறுவனா் பிரபு, பொறுப்பாளா் ராஜாமணி, ஷேக்தாவூத் ஆகியோா் அமைச்சரிடம் வழங்கினா்.

    ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி நாயா், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் எஸ்.கே. வேதரத்தினம், திமுக நிா்வாகிகள் கௌதமன், மா.மீ. புகழேந்தி, என். சதாசிவம், ஆா். துரைராசு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp