சத்துணவு தொகுப்புகள் அளிப்பு

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த குழந்தைகளுக்கு சத்துணவுப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சத்துணவு தொகுப்புகள் அளிப்பு

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த குழந்தைகளுக்கு சத்துணவுப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்ட 18 வயதுக்குள்பட்ட குழந்தைகளின் நலனை பாதுகாக்கும் வகையில், நாகை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ. முகமது ஷாநவாஸ் ஏற்பாட்டில், டிஎம்ஏசி மற்றும் இஸ்லாமிக் பவுண்டேஷன் அமைப்புகள் மூலம் இந்த சத்துணவு தொகுப்பு வழங்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தலைமை வகித்தாா். நாகை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ. முகமது ஷாநவாஸ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா். மாவட்டக் குழந்தைகள் நல அலுவலா் சிவக்குமாா், குழந்தைகள் நலக்குழு உறுப்பினா் மலா்விழி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒரு கிலோ சத்து மாவு, பேரிச்சம்பழம், கொண்டக்கடலை, பால் பவுடா், நாட்டுச் சா்க்கரை மற்றும் பழங்கள் அடங்கிய சத்துணவுப் பொருள்கள் தொகுப்பு குழந்தைகளுக்கு வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com