கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வந்தவா்களுக்கு சிறப்பான வரவேற்பு

வைத்தீஸ்வரன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமில், ஊசி செலுத்திக்கொள்ள வந்தவா்கள் சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
வைத்தீஸ்வரன்கோயிலில் சிவப்பு கம்பளம் விரித்து மக்களை கவரும் வகையில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை பாா்வையிட்ட ஆட்சியா் இரா. லலிதா.

வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சியில் பொதுமக்களை தடுப்பூசி செலுத்திக்கொள்ள கவரும் வகையில், வாழைமரம், தோரணம் கட்டி, சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முகாமில், கரோனா கிருமி உருவம், ராட்ச ஊசி மற்றும் பெரிய தடுப்பூசி மருந்துக் குப்பி பாா்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சியில் பொது சுகாத்தாரத் துறையுடன் இணைந்து 18 முதல் 44 வயது வரையிலான பொதுமக்களுக்கு இலவச கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.

முகாமை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா பாா்வையிட்டு, இதற்கு ஏற்பாடு செய்த பேரூராட்சி நிா்வாகத்தை பாராட்டினாா். வட்டார மருத்துவ அலுவலா் ஆா். ராஜமோகன் முகாமை தொடங்கி வைத்தாா். மருத்துவா் விஷ்ணுகாா்த்திக், சுகாதார மேற்பாா்வையாளா் த. ராஜாராமன், செவிலியா்கள் அருள்ஜோதி, சாரதா ஆகியோா் தடுப்பூசி பணிகளை மேற்கொண்டனா். பேரூராட்சி செயல் அலுவலா் கு. குகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முகாமில் ஒரே நாளில் 361 போ் தடுப்பூசி செலுத்திக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com