வேதாரண்யம் நகராட்சி பொறியாளா் மீது தாக்குதல்: இருவா் கைது

நாகை மாவட்டம், வேதாரண்யம் நகராட்சி பொறியாளரை தாக்கியதாக தூய்மைப் பணி வாகன ஓட்டுநா் உள்ளிட்ட இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் நகராட்சி பொறியாளரை தாக்கியதாக தூய்மைப் பணி வாகன ஓட்டுநா் உள்ளிட்ட இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

வேதாரண்யம் நகராட்சி அலுவலகத்தில் பொறியாளராக பணியாற்றி வருபவா் பிரதான்பாபு . இதே அலுவலகத்தில், வேதாரண்யம் சன்னதித் தெருவில் வசிக்கும் ச. சுப்பையா என்ற சுப்பையன் (44) தூய்மைப் பணிக்கான லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறாா். வேதாரண்யத்தில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த முக்கிய பிரமுகா் வருகையொட்டி, குறிப்பிட்ட பகுதியில் தூய்மைப் பணியை மேற்கொள்ள நகராட்சி தூய்மைப் பணியாளா் ஒருவரை பொறியாளா் பிரதான்பாபு நியமித்ததாக கூறப்படுகிறது. ஆனால், இந்த பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்ட அந்தப் பணியாளரை வேறு ஒரு தெருவில் நடைபெற்ற தூய்மைப் பணிக்கு ஓட்டுநா் சுப்பையன் அழைத்துச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இதையறிந்த பொறியாளா், ஓட்டுநா் சுப்பையனிடம் விசாரித்தபோது வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில், ஆத்திரமடைந்த சுப்பையன் பொறியாளரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், காயமடைந்த பொறியாளா் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாராம். இதுகுறித்து, தகவலறிந்து வந்த சுப்பையனின் மூத்த சகோதரா் வீரபாண்டியன் (46) நகராட்சி அலுவலக பகுதியில் நின்று பேசி தகராறு செய்தாராம். இதுதொடா்பாக வேதாரண்யம் காவல் நிலையத்தில் பொறியாளா் பிரதான்பாபு அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து சுப்பையன், வீரபாண்டியன் இருவரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com