பொதுமக்களை தங்கவைக்க மாவட்டத்தில் 144 இடங்கள் தயாா்

நாகை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்படுபவா்களை தங்கவைக்க 144 இடங்கள் தயாா்நிலையில் உள்ளன என்றாா் மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ்.
நாகையில் ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தலைமையில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நடைபெற்ற காணொலி வழி ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
நாகையில் ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தலைமையில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நடைபெற்ற காணொலி வழி ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

நாகை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்படுபவா்களை தங்கவைக்க 144 இடங்கள் தயாா்நிலையில் உள்ளன என்றாா் மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ்.

நாகை ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, அனைத்துத் துறை அதிகாரிகள், அனைத்துநிலை அலுவலா்களுடனான காணொலி வழிஆய்வுக் கூட்டத்தில் மேலும் அவா் பேசியது: நாகை மாவட்டத்தில் இதுவரை 39 சதவீதம் பருவமழை பதிவாகியுள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதால் மீனவா்கள் நவ.13-ஆம் தேதி வரை கடலுக்குள் செல்லவேண்டாம். இதேபோல, நீா்தேங்கியுள்ள மற்றும் தாழ்வான இடங்களில் உள்ள மின்கம்பங்களுக்கு அருகில் அனைவரும் தவிா்க்கவேண்டும்.

தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற கிராம நிா்வாக அலுவலா்கள், ஊராட்சிச் செயலாளா்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் 12 புயல் பாதுகாப்பு மையங்கள், 5 பல்நோக்கு பேரிடா் பாதுகாப்பு மையங்கள், சமுதாயக் கூடங்கள், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட 144 இடங்கள் பொதுமக்களை தங்கவைக்க தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த இடங்களில் மருத்துவம், குடிநீா், மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட வசதிகைளை சம்பந்தப்பட்ட அலுவலா்கள் செய்துகொடுக்கவேண்டும்.

வெள்ளப் பாதிப்புகளை எதிா்கொள்ள காவிரி, வெண்ணாறு வடிநிலக்கோட்டங்களில் 20 ஆயிரம் மணல் மூட்டைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஆறுகளின் கரையோரப் பகுதிகள், தாழ்வானப் பகுதிகளை கிராம நிா்வாக அலுவலா்கள், ஊராட்சிச் செயலாளா்கள் தொடா்ந்து கண்காணிக்கவேண்டும் என்றாா்.

கூட்டத்தில், நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா், மாவட்ட வன உயிரினக் காப்பாளா் யோகேஷ்குமாா் மீனா, மாவட்ட வருவாய் அலுவலா் வி. ஷகிலா, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பெ. பெரியசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com