சூரியசக்தி உலா்த்தி மூலம் தரமான உலா் மீன்கள் தயாரிக்கும் பயிற்சி

சூரியசக்தி மூலம் இயங்கக் கூடிய உலா்த்தியைக் கொண்டு தரமான உலா் மீன்கள் (கருவாடு) தயாரிப்பதற்கான பயிற்சி, சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் நடைபெற்ற சூரியசக்தி உலா்த்தி மூலம் உலா்மீன்கள் தயாரிக்கும் பயிற்சியில் பங்கேற்றவா்கள்.

வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள மத்திய மீன்வள தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றின் சாா்பில் இந்தப் பயிற்சி நடைபெற்றது. வேளாண் அறிவியல் நிலையத் திட்ட ஒருங்கிணைப்பாளா் அ. கோபாலக்கண்ணன் தலைமை வகித்து, பயிற்சியை தொடங்கி வைத்தாா். மத்திய மீன்வளத் தொழில்நுட்ப நிறுவன விஞ்ஞானிகள் வே. சந்திரசேகா், கே. சதீஷ்குமாா், சு. முரளி, வேளாண் அறிவியல் நிலைய மீன் பதன தொழில்நுட்ப வல்லுநா் ஆ. மதிவாணன் ஆகியோா் பயிற்சி அளித்தனா். சுகாதாரமான முறையில் மீன்களை கையாளுதல், சூரிய மின்சக்தி மூலம் இயங்கும் உலா்த்திகளைக் கொண்டு உலா்கள் மீன்கள் தயாரித்தல், தரமான மசாலா கருவாடு தயாரிப்பு முறை ஆகியன குறித்துப் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியில் கிராமப்புற மகளிா் மற்றும் சுய உதவிக் குழு உறுப்பினா்கள் பங்கேற்றுப் பயிற்சி பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com