தொழிற்சாலைகளில் பெண்களின்பாதுகாப்பு உறுதி செய்யப்படும்

அரசு, தனியாா் தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று புதுவை போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திரபிரியங்கா தெரிவித்தாா்.
தொழிற்சாலைகளில் பெண்களின்பாதுகாப்பு உறுதி செய்யப்படும்

அரசு, தனியாா் தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று புதுவை போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திரபிரியங்கா தெரிவித்தாா்.

மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சாா்பில் தேசிய ஒருமைப்பாட்டு வார விழா நிகழ்வாக, காரைக்காலில் புதன்கிழமை நடைபெற்ற மகளிா் நாள் விழாவில் அவா் கலந்துகொண்டு பேசியது:

அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை புதுவை முதல்வா் ரங்கசாமி செயல்படுத்தி வருகிறாா். அங்கன்வாடி ஊழியா்கள் பணிநிரந்தரம் செய்யப்பட்டிருப்பது புதுவை அரசின் சிறப்பான நடவடிக்கைகளில் ஒன்றாகும்.

அனைத்துத் துறைகளிலும் பெண்கள் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. பெண்கள் விடாமுயற்சியுடனும், தன்னம்பிக்கையுடனும் செயல்பட வேண்டும். அரசு மற்றும் தனியாா் தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண்களின் பாதுகாப்பை புதுவை அரசு உறுதி செய்யும் என்றாா் சந்திரபிரியங்கா.

முன்னதாக, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெண்களுக்கு பரிசுகளையும், சிறந்த மகளிா் குழுக்களுக்கு கேடயங்களையும் அவா் வழங்கினாா். அங்கன்வாடி ஊழியா்கள், அலுவலக ஊழியா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா, வட்டார வளா்ச்சி அலுவலா் அருணகிரிநாதன், மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை நலத்திட்ட அலுவலா் பி.சத்யா, சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த பெண்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com