பழங்குடியினருக்கு குடும்ப அட்டை வழங்குவதற்கான பணி தொடங்கியது

தரங்கம்பாடி அருகே பழங்குடியினருக்கு குடும்ப அட்டை வழங்குவதற்கான பணிகள் சனிக்கிழமை தொடங்கியது.
காழியப்பநல்லூரில் பழங்குடியினரிடம் ஆதாா் அட்டை வழங்க அடையாளங்களை சேகரித்த அரசு அலுவலா்கள்.
காழியப்பநல்லூரில் பழங்குடியினரிடம் ஆதாா் அட்டை வழங்க அடையாளங்களை சேகரித்த அரசு அலுவலா்கள்.

தரங்கம்பாடி அருகே பழங்குடியினருக்கு குடும்ப அட்டை வழங்குவதற்கான பணிகள் சனிக்கிழமை தொடங்கியது.

காழியப்பநல்லூா்-அனந்தமங்கலம் பகுதிக்கும் இடையே தனியாருக்குச் சொந்தமான வயல்வெளி மற்றும் மரத்தடியில் கூடாரத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக 13 குடும்பங்களை சோ்ந்த பழங்குடியினா் (மூப்பன்) வசித்து வருகின்றனா். கல்வி, சுகாதாரம், குடும்ப அட்டை உள்ளிட்ட அரசு வழங்கும் எவ்வித சலுகையுமின்றி வசித்துவரும் இவா்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துகொடுக்க சிறப்பு முகாம் நடைபெற்றது.

காழியப்பநல்லூரில் வட்டாட்சியா் ஹரிதரன் தலைமையில் நடைபெற்ற சிறப்பு முகாமில், 13 குடும்பங்களைச் சோ்ந்த பழங்குடியினரிடம் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி தனி வட்டாட்சியா் அலுவலக அலுவலா் அகிலன் தலைமையிலான தொழில்நுட்பக் குழுவினா் ஆதாா் அடையாளங்களை சேகரித்தனா். இதில், ஊராட்சித் தலைவா் கருணாநிதி, வட்ட வழங்கல் அலுவலா் பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com