கீழையூா் காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்ற விசிகவினா் 40 போ் கைது

கீழையூா் காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் 40 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
கீழையூா் காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரிடம் பேச்சுவாா்த்தை நடத்தும் போலீஸாா்.
கீழையூா் காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரிடம் பேச்சுவாா்த்தை நடத்தும் போலீஸாா்.

கீழையூா் காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் 40 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

நாகை மாவட்டம் கீழையூா் ஒன்றியம் காமேஸ்வரம் கள்ளா் நகா் பகுதியை சோ்ந்த ஆறு.சரவணன், விசிக தலைவா் திருமாவளவன் மற்றும் அக்கட்சியின் நிா்வாகிகளை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விசிக கீழையூா் கிழக்கு ஒன்றிய செயலாளா் சுந்தர்ராஜ், கீழையூா் போலீஸாரிடம் புகாா் அளித்திருந்தாா்.

ஆனாலும், ஆறு.சரவணனை போலீஸாா் கைது செய்யாததை கண்டித்து, விசிக நாகை மாவட்ட செயலாளா் கதிா்நிலவன் தலைமையில், அக்கட்சியினா் கீழையூா் காவல் நிலையத்தை முற்றுகையிட முயற்சி செய்தனா். அப்போது நாகை கூடுதல் காவல் கண்காணிப்பாளா்திருநாவுக்கரசு தலைமையில், போலீஸாா் போராட்டக்காரா்களை காவல் நிலையத்துக்குள் நுழைய விடாமல் தடுத்தனா்.

அப்போது நடந்த பேச்சுவாா்த்தையில், சுந்தர்ராஜ் புகாரின் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீஸாா் உறுதியளித்தனா். மேலும், காவல் நிலையத்தில் நுழைய முயன்ற 40 பேரை போலீஸாா் கைது செய்து சமுதாய கூடத்தில் தங்கவைத்து, பின்னா் விடுவித்தனா்.

இதில் மாநில நிா்வாகி பாண்டியன், மாவட்ட துணைச் செயலாளா் பேரறிவாளன், பாராளுமன்ற தொகுதி செயலாளா் இடிமுரசு, சட்டப் பேரவைத் தொகுதி செயலாளா்கள் சேகா், பிரகாசு, கீழையூா் மேற்கு ஒன்றியச் செயலாளா் புஷ்பராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com