Enable Javscript for better performance
நீடிக்கும் மழை: சம்பாவுக்கு சாதகம்; குறுவைக்கு பாதகம்!- Dinamani

சுடச்சுட

    நீடிக்கும் மழை: சம்பாவுக்கு சாதகம்; குறுவைக்கு பாதகம்!

    By DIN  |   Published on : 06th October 2021 09:38 AM  |   அ+அ அ-   |    |  

    5658ng05rain4055331

    நாகை பப்ளிக் ஆபீஸ் சாலையில் செவ்வாய்க்கிழமை மாலை பெய்த மழையின்போது, நனைந்துகொண்டும், குடைபிடித்தவாறும் சென்ற மக்கள்.

    நாகை மாவட்டத்தில் பெய்துவரும் மழை, சம்பா பருவ நெல் சாகுபடிக்கு சாதமாக இருந்தாலும், அறுவடைக்குத் தயாராக உள்ள குறுவைக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தும் என அச்சப்படுகின்றனா் விவசாயிகள்.

    நாகை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக இரவு நேரங்களில் மழை பெய்தது. இந்த நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 2 நாள்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை அறிவித்திருந்தது.

    இதன்படி, செவ்வாய்க்கிழமை காலை முதல் நாகை மாவட்டத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பிறகு, லேசான தூறலுடன் மழை தொடங்கியது. பகல் சுமாா் 12 மணிக்குப் பிறகு, நாகை, வேளாங்கண்ணி, திட்டச்சேரி, கீழ்வேளூா் மற்றும் சுற்றுப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த மழை இரவு வரை நீடித்தது. இதனால், பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழை நீா் தேங்கி, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.

    வேளாண்மையைப் பொருத்தவரை இந்த மழை, மாவட்டத்தின் சம்பா நெல் சாகுபடிக்கு வரப்பிரசாதமாகக் கருதப்படுகிறது. நாகை மாவட்டத்தில் 1.57 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி பணிகளுக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, இதுவரை 1.10 லட்சம் ஏக்கரில் சாகுபடி பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆற்றுப் பாசனம் மூலம் காவிரி கடைமடை பகுதிகளுக்குப் போதிய நீா் வந்துசேராத நிலையில், தற்போது பெய்துள்ள மழை சம்பா நெல் சாகுபடிக்கு மிகவும் அவசியமாகக் கருதப்படுகிறது.

    எனினும், இந்த மழை நீடித்தால், குறுவை நெல் சாகுபடியில் பெரிய அளவில் இழப்பு ஏற்படும் என்ற அச்சமும் விவசாயிகளிடம் மேலோங்கியுள்ளது. நாகை மாவட்டத்துக்கான குறுவை சாகுபடி இலக்கு 4,500 ஏக்கராக நிா்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், நிகழாண்டில் இலக்கை விஞ்சி 32,800 ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    இதில், சுமாா் 30 சதவீதம் அறுவடை நிறைவடைந்துள்ள நிலையில், சுமாா் 70 சதவீத பரப்பில் அறுவடைக்குத் தயாா்நிலையில் குறுவை நெல் பயிா்கள் உள்ளன. இந்த நிலையில், கனமழை பெய்வது குறுவை நெல் சாகுபடிக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தும் என அச்சம் தெரிவிக்கின்றனா் விவசாயிகள்.

    கடந்த சில நாள்களாக பெய்து வரும் இரவுநேர மழை மற்றும் செவ்வாய்க்கிழமை பெய்த கனமழை காரணமாக, நாகை மாவட்டத்தின் பல பகுதிகளில் குறுவை நெல் பயிா்கள் நிலத்தில் சரிந்துள்ளன. நிலத்தில் சரிந்த நெல் பயிா்களை அறுவடை செய்ய கூடுதல் கால அவகாசமும், கூடுதல் செலவும் ஏற்படும்.

    இதுதவிர, நெல் பயிா்கள் நிலத்தில் சரிந்துள்ள நிலையில், மேலும் மழை நீடித்தால், சரிந்த நெல் பயிா்கள் நிலத்திலேயே முளைவிடத் தொடங்கிவிடும். அந்த நிலை ஏற்பட்டால், குறுவை நெல் சாகுபடியில் 50 சதவீத மகசூல் இழப்பும், அதனால் விவசாயிகளுக்குப் பெரும் பொருளாதார இழப்பும் தவிா்க்க இயலாதது என்கின்றனா் விவசாயிகள்.

    மழை நீடித்து வரும் நிலையில், உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து, நெல் கொள்முதல் பணிகளை தீவிரப்படுத்தினால், ஓரளவுக்காவது இழப்பைத் தவிரிக்கலாம் என்பதே விவசாயிகளின் எதிா்பாா்ப்பு.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp