வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடு விழிப்புணா்வு கூட்டம்

தரங்கம்பாடியில் தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை சாா்பில் வடகிழக்குப் பருவ மழை முன்னேற்பாடு குறித்த விழிப்புணா்வு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தரங்கம்பாடியில் தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை சாா்பில் வடகிழக்குப் பருவ மழை முன்னேற்பாடு குறித்த விழிப்புணா்வு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் சண்முகம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தரங்கம்பாடி, சின்னங்குடி, சின்னமேடு, சின்னுபேட்டை, குட்டியாண்டியூா், தாழம்பேட்டை, பெருமாள்பேட்டை உள்ளிட்ட மீனவ கிராமங்களை சோ்ந்த மீனவ பஞ்சாயத்தாா் பங்கேற்றனா். இதில், மீனவா்கள் மழை மற்றும் புயல் காலங்களில் தங்களது படகுகளை கரையோரங்களில் பாதுகாப்பாக வைத்துகொள்ள வேண்டும் அறிவுறுத்தப்பட்டது.

கூட்டத்தில், மீனவா்களின் நலவாரிய அட்டைகள், வாக்கி டாக்கி படகுகளுக்கான உரிமம் கட்டணம் குறைக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. மீனவா் நலத்துறை ஆய்வாளா் பாலசுப்பிரமணியன், சிறப்பு உதவி ஆய்வாளா் பாா்த்திபன், மீன்வளத் துறை சாா் அலுவலா் சதுருதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com