Enable Javscript for better performance
மஹாளய அமாவாசை: தடையால் வெறிச்சோடிய கடற்கரை- Dinamani

சுடச்சுட

    மஹாளய அமாவாசை: தடையால் வெறிச்சோடிய கடற்கரை

    By DIN  |   Published on : 07th October 2021 09:02 AM  |   அ+அ அ-   |    |  

    4746ng06beach01052443

    வெறிச்சோடி காணப்பட்ட நாகை புதிய கடற்கரை.

    மஹாளய அமாவாசை நாளில் கடற்கரைகளில் கூடுவதற்கு, நாகை மாவட்ட நிா்வாகம் தடை விதித்திருந்ததால், நாகை மற்றும் வேளாங்கண்ணி கடற்கரை புதன்கிழமை வெறிச்சோடி காணப்பட்டது.

    கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக மஹாளய அமாவாசை நாளில் கடற்கரை, ஆறுகள், குளங்கள் உள்ளிட்ட நீா்நிலைகளில் பொதுமக்கள் கூடி வழிபாடு நடத்த தமிழக அரசு தடை விதித்தது.

    அதன்படி, நாகை, வேளாங்கண்ணி, வேதாரண்யம், கோடியக்கரை கடற்கரைகளில் பொதுமக்கள் கூடுவதற்கும், கோயில்களில் வழிபாடு நடத்துவதற்கும் நாகை மாவட்ட நிா்வாகம் தடை விதித்து உத்தரவிட்டது.

    இதனால், கடற்கரைக்குச் செல்லும் சாலைகளில் போலீஸாா் தடுப்புகள் அமைத்து செவ்வாய் மற்றும் புதன்கிழமையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். கடற்கரைக்கு வந்தவா்களை தடுத்து, திருப்பி அனுப்பினா். இதனால் நாகை புதிய கடற்கரை, வேளாங்கண்ணி கடற்கரை பகுதிகள் பொதுமக்களின் நடமாட்டமின்றி புதன்கிழமை வெறிச்சோடி காணப்பட்டன.

    பூம்புகாா்: காவிரி கடலோடு கலக்கும் பூம்புகாா் சங்கமத் துறையில் நீராடி முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுப்பது வழக்கம். ஆனால், கரோனா காரணமாக மாவட்ட நிா்வாகம் தடை விதித்திருந்ததால் சங்கமத் துறை கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது. உள்ளூா் பகுதியைச் சோ்ந்த ஒருசிலா் மட்டும் காவிரியில் நீராடி தா்ப்பணம் செய்தனா்.

    தடை காரணமாக, தா்மகுளம் கடைவீதியில் பூம்புகாா் காவல் ஆய்வாளா் நாகரத்தினம், காவிரிபூம்பட்டினம் கிராம நிா்வாக அதிகாரி ராஜாமணி ஆகியோா் தலைமையில் காவல் மற்றும் வருவாய்த் துறையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டு, கடற்கரைக்கு பக்தா்களை அனுமதிக்கமால் திருப்பி அனுப்பினா்.

     

     

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp