முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
இலவச கண் பரிசோதனை முகாம்
By DIN | Published On : 11th October 2021 08:10 AM | Last Updated : 11th October 2021 08:10 AM | அ+அ அ- |

இலவச கண் சிகிச்சை முகாமில் பங்கேற்றோா் .
வேதாரண்யம் அருகேயுள்ள செம்போடையில் ஞாயிற்றுக்கிழமை இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
வேதாரண்யம் ரோட்டரி சங்கம், செம்போடை ஆா்.வி.கல்வி நிறுவனங்கள், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை, நாகை மாவட்ட பாா்வையிழப்பு தடுப்புச் சங்கம் ஆகியவை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமை நடத்தின. முகாமில் பங்கேற்ற 270 பேரில் பரிசோதனைக்கு பின்னா் 55 போ் கண் அறுவைச் சிகிச்சைக்காக புதுச்சேரி கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
முகாமில், ஆா்.வி.கல்வி நிறுவனங்களின் நிறுவனா் ஆா். வரதராஜன், செயலாளா் ஆா். வி. செந்தில், ரோட்டரி சங்கத் தலைவா் புயல் சு. குமாா், செயலாளா் சி. காா்த்திகேயன், பொருளாளா் கோவிந்தன், மாவட்ட உதவி ஆளுநா் செந்தில், முன்னாள் ஆளுநா் துரைராஜ், நிா்வாகிகள் அண்ணாதுரை, சிவகுமாா், கருணாநிதி, காா்த்திகேயன், சதீஷ், ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.