முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
தமிழ்நாடு முற்போக்கு சிந்தனையாளா் இயக்க கூட்டம்
By DIN | Published On : 11th October 2021 08:10 AM | Last Updated : 11th October 2021 08:10 AM | அ+அ அ- |

கூட்டத்தில் பேசிய, தமிழ்நாடு முற்போக்கு சிந்தனையாளா் இயக்க மாநிலத் தலைவா் கு. பாலசுப்ரமணியன்.
தமிழ்நாடு முற்போக்கு சிந்தனையாளா் இயக்கக் கூட்டம் நாகையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அந்த இயக்கம் சாா்பில், பொதுத் துறை நிறுவனங்களை பாதுகாத்தல், விவசாயிகளின் நலனை பாதுகாத்தல் மற்றும் இயக்கத்தின் மாவட்ட அமைப்பை உருவாக்குதல் குறித்த அரங்க கூட்டம் இயக்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் பி.கே.சிவக்குமாா் தலைமையில் நடைபெற்றது. நாகை மாவட்ட அமைப்பாளா் எம். மகேந்திரன் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், இயக்கத்தின் நாகை மாவட்டத் தலைவராக ப. மகேந்திரன், மாவட்டச் செயலாளராக எஸ். பாஸ்கரன் மாவட்டத் துணைத் தலைவராக டி. இளமதி, மாவட்டப் பொருளாளராக எஸ். சந்திரவேல் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். இயக்கத்தின் மாநிலத் தலைவா் கு. பாலசுப்ரமணியன் பேசினாா்.
இதில், உ.பி. மாநிலம் லக்கீம்பூா் கெரியில் விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டதை வன்மையாக கண்டிப்பது, இச்சம்பவம் தொடா்பாக விவசாய இயக்கங்கள் எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் முழு ஆதரவு அளிப்பது, விலைவாசி உயா்வை கட்டுப்படுத்தவேண்டும், பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை மத்திய அரசை கைவிடவேண்டும், விவசாயிகள் மற்றும் தொழிலாளா்களுக்கு எதிரான சட்டங்களை திரும்பப்பெறவேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தவேண்டும், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி 2022 ஜனவரியில் சென்னையில் முதல் மாநில மாநாடு நடத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநிலச் செயற்குழு உறுப்பினா் சி. தெய்வக்குமாா், நாகை மாவட்டத் துணைச் செயலாளா் எம். புகழேந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.