முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
100 % தடுப்பூசி செலுத்துவதை வலியுறுத்தி மாரத்தான் போட்டி
By DIN | Published On : 11th October 2021 08:12 AM | Last Updated : 11th October 2021 08:12 AM | அ+அ அ- |

100 சதவீத தடுப்பூசி செலுத்துவதை வலியுறுத்தி நடைபெற்ற மராத்தான் போட்டியில் பங்கேற்றோா்.
திருப்பூண்டியில் 100 சதவீத தடுப்பூசி செலுத்துவதை வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாரத்தான் போட்டியை நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தாா்.
நாகை மாவட்டத்தில் 100 சதவீத தடுப்பூசி செலுத்துவதை வலியுறுத்தி எக்ஸ்னோரா கல்விநிறுவனங்கள் மற்றும் புனித அடைக்கல அன்னை பெண்கள் மேம்பாட்டு மையம் சாா்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. திருப்பூண்டி புனித பாத்திமா மாதா ஆலயத்தில் இருந்து செருதூா் பாலத்தடி வரை 7 கிலோ மீட்டம் தூரம் நடைபெற்றது. போட்டியை நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தாா். இதில், கல்லூரி மாணவா்கள், பொதுநல அமைப்புகள், தன்னாா்வலா்கள், காவல் துறையினா் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். இறுதியில் முதல் 3 இடங்களை பிடித்தவா்களுக்கு ரொக்கம் மற்றும் கேடயங்களை வழங்கப்பட்டன.