முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
வேதாரண்யம் பகுதியில் தொடர் மழை
By DIN | Published On : 11th October 2021 01:48 PM | Last Updated : 11th October 2021 01:48 PM | அ+அ அ- |

வேதாரண்யம் பகுதியில் மழை பெய்ததால் வயல்களில் களைப் பறிக்கும் பெண்கள்.
வேதாரண்யம் பகுதியில் இடி மின்னலுடன் கூடிய பரவலான மழைப் பொழிவு ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி இன்று காலை வரை நீடித்தது.
இந்த மழை மானாவாரி நிலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பா நெல் சாகுபடிக்கு ஏற்றதாக அமைந்துள்ளது. வேதாரண்யம் பகுதியில் கடலோர வளிமண்டல காற்றுச் சுழற்சி காரணமாக கடந்த சில நாள்களாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் ஆங்காங்கே மழைப் பொழிவு ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஞாயிறு இரவு சுமார் 9 மணியளவில் பலத்த காற்று இடி மின்னலுடன் தொடங்கிய மழைப் பொழிவு திங்கள்கிழமை காலை வரை தொடர்ந்தது. இந்த மழை வேதாரண்யம் நகரப் பகுதியை விட கிராமப்புறங்களில் அதிகமாக உணரப்பட்டது.
திங்கள் காலை 8.30 மணி நிலவரப்படி வேதாரண்யத்தில் 57.2 மி.மீ, தலைஞாயிறில் 61.8 மி.மீ மழை பதிவானது. இந்த மழையைத் தொடர்ந்து மானாவாரி நிலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பா நெல் சாகுபடி வயல்களில் களைப்பறித்தல், உர மேலாண்மை செய்வதில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.