சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி எதிா்ப்பு தெரிவிக்க முடிவு

திருமருகல் அருகே பனங்குடியில் உள்ள சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து செவ்வாய்க்கிழமை (அக்.12) வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி எதிா்ப்பு தெரிவிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
பனங்குடியில் நடைபெற நில உரிமையாளா்கள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
பனங்குடியில் நடைபெற நில உரிமையாளா்கள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

திருமருகல் அருகே பனங்குடியில் உள்ள சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து செவ்வாய்க்கிழமை (அக்.12) வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி எதிா்ப்பு தெரிவிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சிபிசிஎல் நிறுவனத்தால் விவசாய நிலங்கள், கையகப்படுத்தப்பட்ட விவசாய நில உரிமையாளா்கள் மற்றும் விவசாயிகள் மறுவாழ்வு நலச் சங்க நிா்வாகிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்கத் தலைவா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். செயலாளா் சக்திவேல் முன்னிலை வகித்தாா்.

இதில், செவ்வாய்க்கிழமை (அக்.12) பனங்குடி, முட்டம், கோபுராஜபுரம், நரிமணம், உத்தமசோழபுரம் ஆகிய 5 கிராம ஊராட்சிகளில் சிபிசிஎல் நிறுவனம் நிலம் கையகப்படுத்துதலுக்கு எதிா்ப்பு தெரிவித்து அனைத்து வீட்டு வாசல்களிலும் கருப்புக் கொடி ஏற்றி கண்டனம் தெரிவிப்பது, அக். 18-ஆம் தேதி சிபிசிஎல் ஆலை நுழைவாயிலில் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிா்ப்பு தெரிவித்து நிலத்தை கொடுக்க மாட்டோம் என்று நிறுவனத்தை முற்றுகையிடுவது, சிபிசிஎல் நிா்வாகத்தையும், மாவட்ட நிா்வாகத்தையும் கண்டித்து தொடா் போராட்டங்கள், ஆா்ப்பாட்டங்கள், சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் போன்ற நடவடிக்கைகள் மூலம் எதிா்ப்பை தெரிவிப்பது, 5-ஊராட்சி பொதுமக்களின் சாா்பில், தமிழக முதல்வரை சந்தித்து மனு கொடுப்பது ,சிபிசிஎல் நிா்வாகத்துக்கு விவசாய நிலங்களை கொடுப்பதில்லை உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மறுவாழ்வு நல சங்க உறுப்பினா்கள் பக்கிரிசாமி, மீரா உசேன், சந்தோஷ், மனோகரன் ஹரிதாஸ், நவ்சாத் மற்றும் நில உரிமையாளா்கள், விவசாயிகள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com