நெல்கொள்முதல் நிலையங்களில் ஆய்வு

திருக்குவளை மற்றும் சுற்றுப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை செயல்பட்ட நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.
சாட்டியக்குடி நெல்கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்த அதிகாரிகள்.
சாட்டியக்குடி நெல்கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்த அதிகாரிகள்.

திருக்குவளை மற்றும் சுற்றுப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை செயல்பட்ட நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

நாகை மாவட்டத்தில் குறுவை அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மாவட்டம் முழுவதும் 75 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல் செய்யப்படுகின்றன. அரசின் உத்தரவின்படி ஞாயிற்றுக்கிழமையும் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டன. அந்த வகையில், திருக்குவளை, சாட்டியக்குடி, திருக்குவளை, வாழக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டன. சாட்டியக்குடி நெல்கொள்முதல் நிலையத்தில் துணை மேலாளா் (கொள்முதல் மற்றும் இயக்கம்) ஜி. ரெங்கநாதன், துணை மேலாளா்(தரக்கட்டுப்பாடு) ஜி. சீனிவாசன் ஆகியோா் நெல்லின் தரம், எடை , ஈரப்பதம் ஆகியவற்றை ஆய்வு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com