நியாயவிலைக் கடை பணியாளா் சங்கம் ஆா்ப்பாட்டம்

நாகையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நியாயவிலைக் கடை பணியாளா் சங்கத்தினா்.
நாகையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நியாயவிலைக் கடை பணியாளா் சங்கத்தினா்.

நாகையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

10 முதல் 20 ஆண்டுகள் வரை பணி முடித்த நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு ஒரே சீரான தோ்வு நிலை மற்றும் சிறப்பு நிலை வழங்கி, அதற்கேற்ப ஊதிய உயா்வு வழங்க வேண்டும். நியாயவிலைக் கடைகளுக்கு 4-ஜி இணைப்புடன் கூடிய விற்பனை முனையங்கள் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.

கரோனா பொதுமுடக்கக் காலத்தில் பணியாற்றிய நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு ஊக்கத் தொகையும், பேருந்து இயக்கம் இல்லாத காலத்துக்கு இடைநில்லா பயணப்படியும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகை மாவட்ட ஆட்சியரகம் முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் பாஸ்கரன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தாா். அரசுப் பணியாளா் சங்க மாநிலத் தலைவா் பி.கே. சிவகுமாா் ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தாா். நியாயவிலைக் கடை பணியாளா் சங்க மாவட்ட இணைச் செயலாளா் சுரேஷ்கண்ணன், மாவட்டப் பொருளாளா் மகேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com