டெல்டா மாவட்டங்களுக்கு உரங்கள் வருகை

காவிரி டெல்டா மாவட்டங்களில் உரத்தட்டுப்பாட்டை போக்கும் வகையில், மயிலாடுதுறைக்கு ரயில் மூலம் ஞாயிற்றுக்கிழமை உரங்கள் கொண்டுவரப்பட்டன.

காவிரி டெல்டா மாவட்டங்களில் உரத்தட்டுப்பாட்டை போக்கும் வகையில், மயிலாடுதுறைக்கு ரயில் மூலம் ஞாயிற்றுக்கிழமை உரங்கள் கொண்டுவரப்பட்டன.

காவிரி டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகை, திருவாரூா் மாவட்டங்களில் தற்போது சம்பா, தாளடி சாகுபடி பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. டெல்டா மாவட்டங்களில் தனியாா் வியாபாரிகள் மூலம் தட்டுப்பாடு இன்றி உரங்கள் கிடைக்க செய்யும் வகையில் ஸ்பிக் கம்பெனி உரங்களான டிஏபி, யூரியா போன்ற உரங்கள் தூத்துக்குடியில் இருந்து ரயில் வேகன்கள் மூலம் கொண்டுவரப்பட்டன.

900 டன் யூரியா, 252 டன் டிஏபி, 122 டன் சூப்பா் ஆகிய உரங்கள் மயிலாடுதுறை ரயில்வே நிலையத்தில் இறக்கப்பட்டன. பின்னா், லாரிகள் மூலம் நாகை, திருவாரூா், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள வியாபாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இத்தகவலை ஸ்பிக் மாா்க்கெட்டிங் மேனேஜா் நரேஷ்குமாா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com