கீழையூர் ஒன்றியம்: உள்ளாட்சி இடைத்தேர்தல் தேர்தல் முடிவுகள்

நாகை மாவட்டம்  கீழையூர் ஒன்றியத்திற்குட்பட்ட 3 ஊராட்சிகளில் நடைபெற்ற உள்ளாட்சி இடைத்தேர்தலில் 1ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் 3 வார்டு உறுப்பினர் பதவிக்கான வாக்கு பதிவு கடந்த அக்.9 நடைபெற்று முடிந்தது.
கீழையூர் ஒன்றியம்
கீழையூர் ஒன்றியம்

நாகை மாவட்டம்  கீழையூர் ஒன்றியத்திற்குட்பட்ட 3 ஊராட்சிகளில் நடைபெற்ற உள்ளாட்சி இடைத்தேர்தலில் 1ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் 3 வார்டு உறுப்பினர் பதவிக்கான வாக்கு பதிவு கடந்த அக்.9 நடைபெற்று முடிந்தது.

 இந்நிலையில்,கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை  அக்.12 காலை துவங்கியது.

 வாக்கு எண்ணிக்கை முடிவில் எட்டுக்குடி ஊராட்சி மன்ற தலைவர்  பதவிக்கான தேர்தலில் பதிவான  1344 வாக்குகளில்  லேகா காரல்மாக்ஸ்  742 வாக்குகள் (திமுக ஆதரவு ) , சசிகலா ஸ்டாலின் 590 வாக்குகள்( அதிமுக அதரவு) , 12 செல்லாத
வாக்குகள் இருந்தன. இதில்  லேகா காரல் மார்க்ஸ் 152 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

மேலும் எட்டுக்குடி 1வது உறுப்பினர் பதவிக்கான  தேர்தலில் பதிவான 248 வாக்குகளில் ஆனந்தி (எ) ஆனந்தவள்ளி (திமுக ஆதரவு)145 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

திருப்பூண்டி கிழக்கு 2வது வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் பதிவான 398 வாக்குகளில் விஜயகுமாரி (திமுக ஆதரவு) 247  வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

வேட்டைக்காரனிருப்பு 3வது வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் பதிவான 310 வாக்குகளில் என்.ரஞ்சனி (திமுக ஆதரவு)  169 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்களை தேர்தல் நடத்தும் அலுவலரும் கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலருமான எஸ்.ராஜகுமார் வழங்கினார். உடன் திமுக கீழையூர் ஒன்றிய செயலாளர் ஏ. தாமஸ் ஆல்வா எடிசன், கீழையூர் ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் மு.பா. ஞானசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com