சாலையை சீரமைக்கக் கோரி நாற்று நடும் போராட்டம்

கீழையூா் அருகே சேறும் சகதியுமான சாலையை சீரமைக்கக் கோரி, கிராம மக்கள் நாற்று நடும் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

கீழையூா் அருகே சேறும் சகதியுமான சாலையை சீரமைக்கக் கோரி, கிராம மக்கள் நாற்று நடும் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

நாகை மாவட்டம், கீழையூா் ஒன்றியம் கீழப்பிடாகை ஊராட்சி சிந்தாமணி பிள்ளையாா் கோயில் தெருவில் சுமாா் 100 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்குள்ள சாலையை சீரமைக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனா். மழைக் காலங்களில் இந்த சாலை போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலைக்கு சென்றுவிடுவதால் இப்பகுதி விவசாயிகள் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவா்கள் பாதிக்கப்படுகின்றனா்.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக விட்டுவிட்டு பெய்துவரும் மழையால் இந்த சாலை சேறும் சகதியுமாக உள்ளது. இதனால், சுகாதாரப் பாதிப்பும் ஏற்படுகிறது எனத் தெரிவிக்கும் இப்பகுதி மக்கள், உடனடியாக சீரமைக்கக் கோரி, சேறும் சகதியுமான அந்த சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com