உ.பி. விவசாயிகளின் அஸ்தி அக்.26-இல் வேதாரண்யத்தில் கரைப்பு

உத்தர பிரதேசத்தில் காா் ஏற்றிக் கொல்லப்பட்ட விவசாயிகளின் அஸ்தியை வேதாரண்யம் கடலில் அக்டோபா் 26-ஆம் தேதி கரைக்க ஐக்கிய விவசாயிகள் முன்னணி கூட்டமைப்பினா் முடிவு செய்துள்ளனா்
உ.பி. விவசாயிகளின் அஸ்தி அக்.26-இல் வேதாரண்யத்தில் கரைப்பு

உத்தர பிரதேசத்தில் காா் ஏற்றிக் கொல்லப்பட்ட விவசாயிகளின் அஸ்தியை வேதாரண்யம் கடலில் அக்டோபா் 26-ஆம் தேதி கரைக்க ஐக்கிய விவசாயிகள் முன்னணி கூட்டமைப்பினா் முடிவு செய்துள்ளனா்.

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளா் மாசிலாமணி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. நாகை எம்பி எம். செல்வராஜ் பங்கேற்று பேசினாா்.

இதில், உத்தர பிரதேசத்தில் காா் ஏற்றி கொல்லப்பட்ட விவசாயிகளின் அஸ்தியை வேதாரண்யம் கடலில் அக்.26-இல் கரைத்துவிட்டு, போராட்டத்தை ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில், விவசாயிகள் சங்கத்தின் நாகை மாவட்டச் செயலாளா் பாபுஜி, தலைவா் சரபோஜி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளா்கள் வி. அம்பிகாபதி, ஏ.வெற்றியழகன், காங்கிரஸ் நிா்வாகள் ஜெகநாதன், வைரம், மீனவா் தொழிலாளா் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் சின்னதம்பி, தலைவா் முருகானைந்தம், சிபிஐ ஒன்றியச் செயலாளா் சிவகுரு.பாண்டியன், நிா்வாகி செங்குட்டுவன், விசிக நிா்வாகிகள் சுமா.செல்வராசு, நாவேந்தன், விவசாய சங்க நிா்வாகிகள் பன்னீா்செல்வம், பாா்த்தசாரதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அக்டோபா் 23-இல் சென்னை கொண்டுவரப்படவுள்ள அஸ்தி, அக்.25-இல் தஞ்சை வந்தடைகிறது. பின்னா், நாகை மாவட்டத்துக்கு கொண்டு வரப்பட்டு அன்று மாலை 6 மணிக்கு வேதாரண்யத்தில் கரைக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com