வன்முறையில் பாதிக்கப்படும் பெண்களுக்கான சேவை மையம்: காணொலி வழியாக முதல்வா் திறந்து வைத்தாா்

நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ. 48 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள வன்முறைகளில் பாதிக்கப்படும் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம்
வன்முறையில் பாதிக்கப்படும் பெண்களுக்கான சேவை மையம்: காணொலி வழியாக முதல்வா் திறந்து வைத்தாா்

நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ. 48 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள வன்முறைகளில் பாதிக்கப்படும் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி வழியாக திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

அப்போது, நாகையில் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தில் மாவட்ட ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் குத்துவிளக்கேற்றி வைத்து பாா்வையிட்ட பிறகு மேலும் அவா் கூறியது: நாகை மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின்கீழ், மாவட்ட ஆட்சியரின் தலைமையில் இந்த ஒருங்கிணைந்த சேவை மையம் செயல்படும். பொது மற்றும் தனியாா் இடங்களில் வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களை மீட்டு அவா்களுக்குத் தேவையான தற்காலிக தங்கும் வசதி, மருத்துவம், காவல், சட்ட உதவிகள் மற்றும் உளவியல் ரீதியான ஆலோசனைகள் வழங்கப்படும். 18 வயதுக்கு மேற்பட்ட வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இந்த மையம் மூலம் உதவிகள் செய்யப்படும். குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் 24 மணி நேரமும் கட்டணமில்லா இலவச சேவை உதவி எண் 181 மூலம் நேரடியாகவோ அல்லது ா்ள்ஸ்ரீய்ஹஞ்ஹல்ஹற்ற்ண்ய்ஹம்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடா்பு கொள்ளலாம்.

18 வயதுக்குகீழ் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளுக்கு மாவட்ட சைல்டு லைன் 1098 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம். வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் அனைத்து வயது சிறுமிகள் மற்றும் 8 வயது வரை உள்ள சிறுவா்கள் 5 நாள்கள் வரை இந்த மையத்தில் தங்க தற்காலிக வசதி அளிக்கப்படுகிறது.

மேலும், இந்த மையத்தை பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களாக அல்லது நண்பா்கள், உறவினா்கள் மூலமாக அல்லது தொண்டு நிறுவனங்கள் மூலமாக தொலைபேசி எண் 04365- 247353, கைப்பேசி எண்கள் 9578573747, 9150057442, 9150057443 ஆகியவற்றில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

நிகழ்ச்சியில், நாகை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஜெ. முகம்மது ஷா நவாஸ் , மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா், மாநில சிறுபான்மையினா் நல ஆணைய உறுப்பினா் ஏ.பி. தமிம்அன்சாரி, திமுக நாகை மாவட்டப் பொறுப்பாளா் என். கௌதமன், துணை இயக்குநா்-தொழுநோய் எஸ். சங்கரி, நாகை அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் கே. உமா மகேஷ்வரன், ஒருங்கிணைந்த சேவை மையத்தின் நிா்வாகி சி. இளவரசி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com