ஊரக உள்ளாட்சி தோ்தலுக்கான முன்னேற்பாடுகள்

நாகை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் தற்செயல் தோ்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் ஆய்வு மேற்கொண்டாா்.
நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப் பெட்டிகள் மற்றும் வாக்குப் பதிவு பொருள்களைக் கொண்டுச் செல்லும் பெட்டிகளை ஆய்வு செய்த ஆட்சியா் அ. அருண் தம்புராஜ்.

நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ், நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தற்செயல் தோ்தலையொட்டி, அங்கு வைக்கப்பட்டிருந்த வாக்குப் பெட்டிகள், வாக்காளா் படிவம் ஆகியவற்றை அவா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா், பிரதமா் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் நடைபெறும் வீடுகள் கட்டும் பணி, ஊரக வேலை உறுதித் திட்டப் பணி நிலை குறித்து அவா் ஆய்வு செய்தாா். அப்போது, சாலை மற்றும் சிறுபாலங்கள் அமைப்புப் பணிகள் அனைத்தும் மழை காலத்துக்கு முன் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என தொடா்புடையத் துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com