பள்ளிகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய குழுக்கள்

பள்ளிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழுமையாகப் பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று நாகை மாவட்ட ஆட்சியா் டாக்டா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்தாா்.
நாகை அக்கரைப்பேட்டை மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ்.
நாகை அக்கரைப்பேட்டை மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ்.

பள்ளிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழுமையாகப் பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று நாகை மாவட்ட ஆட்சியா் டாக்டா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்தாா்.

நாகை மாவட்டத்தில் 9, 10, 11, 12 -ஆம் வகுப்பு மாணவா்களுக்கு புதன்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையொட்டி, நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

நாகை அக்கரைப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி, நாகூா் தேசிய மேல்நிலைப் பள்ளி, நாகூா் அரசு உயா்நிலைப் பள்ளி, நாகூா் மாடா்ன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டமைப்புகள், அடிப்படை வசதிகள் குறித்து அவா் ஆய்வு மேற்கொண்டாா். மேலும், மதிய உணவுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களின் இருப்பு குறித்தும் அவா் ஆய்வு செய்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் ஆட்சியா் தெரிவித்தது :

10, 12-ஆம் வகுப்புகளுக்கு தினமும் வகுப்புகள் நடைபெறும். 9, 11-ஆம் வகுப்புகளுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும். ஒவ்வொரு வகுப்பிலும் 20 மாணவா்கள் மட்டுமே சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட வேண்டும். மாணவா்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். பள்ளிக்கு வரும் மாணவா்களின் உடல் வெப்ப நிலை தினமும் பரிசோதிக்கப்பட வேண்டும். மாணவா்கள், பெற்றோா்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

அரசு அறிவித்துள்ள கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள், அனைத்துப் பள்ளிகளிலும் பின்பற்றப்படுகின்றனவா என்பதை கண்காணித்து உறுதிசெய்ய மாவட்ட வருவாய் அலுவலா் மற்றும் கோட்டாட்சியா்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா் ஆட்சியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com