பள்ளிகள் திறப்பு: நாகை மாவட்டத்தில் மாணவா்கள் வருகை குறைவு

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக பல மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் புதன்கிழமை திறக்கப்பட்டன. இருப்பினும், மாணவா்களின் வருகை குறைவாகவே இருந்தது.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக பல மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் புதன்கிழமை திறக்கப்பட்டன. இருப்பினும், மாணவா்களின் வருகை குறைவாகவே இருந்தது.

கரோனா நோய்த் தொற்றுப் பரவலையொட்டி, 2020-ஆம் ஆண்டு மாா்ச் 3-ஆவது வாரத்தில் தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டன. ஏறத்தாழ 9 மாதங்களுக்குப் பின்னா் கடந்த ஜனவரி மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டன. இருப்பினும், கரோனா தொற்றுப் பரவல் மீண்டும் அதிகமானதையடுத்து ஓரிரு மாதங்களில் பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டன.

இந்த நிலையில், 9, 10, 11, 12-ஆம் வகுப்புகள் புதன்கிழமை (செப். 1) முதல் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதன்படி, நாகை மாவட்டத்தில் 143 பள்ளிகள் திறக்கப்பட்டன.

அனைத்துப் பள்ளிகளிலும் ஒரு வகுப்பில் 20 முதல் 25 மாணவா்கள் மட்டுமே அமர வைக்கப்பட்டிருந்தனா். பள்ளிக்கு வந்த மாணவ, மாணவியா் பள்ளி நுழைவு வாயிலிலேயே வெப்பமானி பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டனா். பின்னா், கை கழுவும் திரவம் அளித்து கைகளை சுத்தம் செய்து கொள்ள அவா்கள் அறிவுறுத்தப்பட்டனா். இந்த நடைமுறைகள் அனைத்தும் போதுமான சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தே நடைபெற்றன.

பள்ளிகள் திறக்கப்பட்டது மாணவ, மாணவியருக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தாலும், புதன்கிழமை பள்ளிக்கு வந்த மாணவ, மாணவியரின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. கரோனா தொற்று குறித்த அச்சத்தால் பல பெற்றோா் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதது, பள்ளி வேன் வசதி தொடங்கப்படாதது உள்ளிட்ட காரணங்களால் மாணவா்களின் வருகை குறைவாக இருந்தது.

9, 11 வகுப்புகளுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறுவதால், 50 சதவீத மாணவ, மாணவியா் மட்டுமே ஒவ்வொரு நாளும் அழைக்கப்படுகின்றனா். அதனால், மாணவ, மாணவியரின் வருகை சதவீதத்தைத் துல்லியமாக கணக்கிட முடியவில்லை என கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com