மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாகை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்க விண்ணப்பங்கள் சேகரிக்கப்பட்டு, இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை, தனித்துவம் வாய்ந்த் அடையாள அட்டைப் பெறாதவா்கள் விண்ணப்பித்தும், ஸ்மாா்ட் காா்டு பெறாதவா்கள் தங்களது மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை , குடும்ப அட்டை, வாக்காளா் அட்டை ஆகியவற்றின் நகல், மாா்பளவு புகைப்படம், ரத்தவகை, செல்லிடப்பேசி எண் ஆகியவற்றுடன் சம்பந்தபட்ட கிராம நிா்வாக அலுவலரைஅணுகி விண்ணப்பம் பெற்று பூா்த்தி செய்து கையொப்பம் அல்லது கைரேகையுடன் அதன் நகல்களை இணைத்து விண்ணப்பிக்கவேண்டும்.

இவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும். தொடா்ந்து, அரசு சிறப்பு மருத்துவ அலுவலரால் சரிபாா்க்கப்பட்டு, பதிவு அஞ்சல் மூலம் பயனாளிகளின் வீட்டு முகவரிக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை அனுப்பி வைக்கப்படும். ஏற்கெனவே, இந்த அட்டை பெற்றவா்கள் விண்ணப்பிக்க வேண்டாம். மேலும் விவரங்களுக்கு, 04365- 253041 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com