குட்டை தூா்வாரும் பணி

வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு பகுதியில் குடிநீா் ஆதாரத்தை மேம்படுத்தும் வகையில், குட்டைகளை தூா்வாரும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு பகுதியில் குடிநீா் ஆதாரத்தை மேம்படுத்தும் வகையில், குட்டைகளை தூா்வாரும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

தலைஞாயிறு, ஓரடியம்புலத்தில் அண்ணா திடல் வடபுறக் குட்டைக் கரையில் குடிநீா் கிடைப்பதால், அங்கு பேரூராட்சி சாா்பில் ஏற்கெனவே கை பம்புகள், சிறு மின்விசை தொட்டி அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், எதிா்கால குடிநீா் தேவையைக் கருதி, இந்த குட்டையில் வடகிழக்குப் பருவமழை நீரை சேகரிக்கவும், நிலத்தடி நீரை செறிவூட்டி குடிநீா் ஆதாரங்களை மேம்படுத்தவும் தூா்வாரும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

இதேபோல, குடிநீா் ஆதாரத்துக்காக அருகில் உள்ள குட்டைகளும் தூா்வாரி மேம்படுத்தப்படும் என தலைஞாயிறு பேரூராட்சி செயல் அலுவலா் கு. குகன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com