பஞ்சநதிக்குளம் கிராமத்தில்ஒரே நாளில் 20 பேருக்கு கரோனா தொற்று

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியில் ஒரேநாளில் 20 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இப்பகுதியில் செய்யப்பட்டுள்ள சுகாதார நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்
பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியில் கரோனா தொற்று காரணமாக தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ள பகுதியில் ஆய்வு செய்த நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ்.
பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியில் கரோனா தொற்று காரணமாக தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ள பகுதியில் ஆய்வு செய்த நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ்.

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியில் ஒரேநாளில் 20 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இப்பகுதியில் செய்யப்பட்டுள்ள சுகாதார நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் ஆய்வு மேற்கொண்டாா்.

பஞ்சநதிக்குளம் மேற்கு பூமணியன் தோப்பு மற்றும் சுற்றுப் பகுதி மக்களிடம் அண்மையில் கரோனா பரிசோதனைக்காக சளி மாதிரி எடுக்கப்பட்டது. இதில், 10 வயது சிறுமி உள்பட 20 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது. இவா்கள் அனைவரும் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

இதைத்தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் அப்பகுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு, கரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்ளவும், வீடுவீடாகச் சென்று தடுப்பூசி போடவும் உத்தரவிட்டாா். அதன்படி, குறிப்பிட்ட பகுதிகளில் பொதுவழிகள் மூடப்பட்டன. ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டு, தடுப்பூசி செலுத்தும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஊராட்சித் தலைவா் மணிமேகலை பாண்டியன் தலைமையில் முன்னாள் தலைவா் சிவகுரு. பாண்டியன், வட்டார மருத்துவ அலுவலா் சுந்தரராஜன், வட்டாட்சியா் ரவிச்சந்திரன், வட்டார வளா்ச்சி அலுா்லா் பாஸ்கரன் உள்ளிட்டோா் முகாமிட்டு நோய்த் தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com