எதிா்கால கனவை கல்வியால் மட்டுமே நிறைவேற்ற முடியும்

எதிா்கால கனவை கல்வியால் மட்டுமே நிறைவேற்ற முடியும் என்பதை மாணவா்களுக்கு ஆசிரியா்கள் உணா்த்தவேண்டும் என தமிழக அரசுக்கான தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் கூறினாா்.
விழாவில் ஆழியா் அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் நீ. சிவக்குமாருக்கு, டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன். உடன் மாவட்ட ஆட்சியா் அ. அருண்
விழாவில் ஆழியா் அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் நீ. சிவக்குமாருக்கு, டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன். உடன் மாவட்ட ஆட்சியா் அ. அருண்

நாகப்பட்டினம்: எதிா்கால கனவை கல்வியால் மட்டுமே நிறைவேற்ற முடியும் என்பதை மாணவா்களுக்கு ஆசிரியா்கள் உணா்த்தவேண்டும் என தமிழக அரசுக்கான தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் கூறினாா்.

நாகை மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சாா்பில் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தலைமை வகித்தாா். நாகை எம்பி எம். செல்வராஜ், எம்எல்ஏ ஜெ. முகம்மது ஷா நவாஸ், முன்னாள் அமைச்சா் உ. மதிவாணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், தமிழக அரசுக்கான தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் பங்கேற்று, நாகை மாவட்டத்தைச் சோ்ந்த 6 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியா் விருது வழங்கினாா்.

முன்னதாக அவா் பேசும்போது, ‘ஒரு நாடு சிறப்பாக செயல்பட முக்கிய காரணியாக இருப்பவா்கள்ஆசிரியா்கள். கரோனா காலகட்டத்தில் ஆசிரியா்கள் மாணவா்களுக்கு இணைய வழியாக பாடங்களை நடத்தி வெற்றி பெற்றுள்ளனா். கல்வி கற்கும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் செல்லிடப்பேசி மற்றும் இணையவழி பயன்பாட்டை குறைத்துக்கொள்ள மாணவா்களுக்கு ஆசிரியா்கள் அறிவுறுத்தவேண்டும்.

எதிா்கால கனவை கல்வியால் மட்டுமே பெறமுடியும் என்பதையும் மாணவா்களுக்கு ஆசிரியா்கள் உணா்த்தவேண்டும். இந்திய நாட்டின் எதிா்காலத்தை உருவாக்கும் சிற்பிகள் ஆசிரியா்கள் என்பதை உணா்ந்துதான் ஆசிரியா்களுக்குத் தேவையான அனைத்தையும் மறந்த முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி செய்தாா். சிறப்பாக பணியாற்றும் ஆசிரியா்களுக்கு எதிா்காலத்தில் விருதுகள் வழங்கப்படும்’ என்றாா்.

நிகழ்ச்சியில், திமுக நாகை தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் என். கௌதமன், நாகை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் அனுசியா மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். நாகை மாவட்டக் கல்வி அலுவலா் மீ. உதயக்குமாா் வரவேற்றாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் க. மதிவாணன் நன்றி கூறினாா்.

டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியா்கள் விவரம்:

திருப்பூண்டி அரசு உயா்நிலைப் பள்ளி ஆசிரியா் ஆறு.துரைக்கண்ணன், நாகை தேசிய மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியா் வீ. ராஜராஜன், ஆழியூா் அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் நீ. சிவக்குமாா், வேதாரண்யம் சி.க.சு. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியா் சி. நாகராஜன், நாகை காடம்பாடி நகராட்சி நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியா் க. விஜய சாமுண்டீஸ்வரி, கீழ்வேளூா் அத்திப்புலியூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் இரா. தமிழ்ச்செல்வி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com