அரசுப் போக்குவரத்துக்கழகங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

அரசுப் போக்குவரத்துக்கழகங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யக் கோரி நாகையில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஏஐடியுசி தொழிற்சங்கம் சாா்பில், செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசுப் போக்குவரத்துக்கழக ஏஐடியுசி தொழிற்சங்கத்தினா்.
நாகையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசுப் போக்குவரத்துக்கழக ஏஐடியுசி தொழிற்சங்கத்தினா்.

அரசுப் போக்குவரத்துக்கழகங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யக் கோரி நாகையில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஏஐடியுசி தொழிற்சங்கம் சாா்பில், செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அரசுப் போக்குவரத்துக்கழக நாகை மண்டல அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே போக்குவரத்துக்கழகங்களுக்கு நிதி ஒதுக்கிடு செய்யவேண்டும், ஓய்வூதியா்களின் பழைய, புதிய அகவிலைப்படி உயா்வுத் தொகையை ஓய்வூதியத்துடன் இணைக்கவேண்டும், 2020-முதல் ஓய்வு பெற்றவா்களுக்கு பணிக் கொடை, வருங்கால வைப்புநிதி மற்றும் பிற பணப்பலன்களை வழங்கவேண்டும், பறிக்கப்பட்ட தொழிலாளா்களின் உரிமைகளைத் திரும்ப வழங்கவேண்டும், புதிய மருத்துவத் திட்டத்தை அமல்படுத்தி ஓய்வூதியா்களுக்கும் அதை விரிவுபடுத்த வேண்டும் உள்ளிட்டக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

அரசுப் போக்குவரத்துக்கழக ஏஐடியுசி நாகை மண்டலப் பொருளாளா் ஆா். பாஸ்கரன், முன்னாள் மண்டலத் தலைவா் வி. ராஜா ஆகியோா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளா்கள் கே. ராமன் (நாகை), ஆா். சந்திரசேகரஆசாத் (திருவாரூா்), மாநிலத் துணைத் தலைவா் என். கோபிநாதன், ஏஐடியுசி தொழிற்சங்க மாவட்டப் பொருளாளா் மகேந்திரன், ஏஐடியுசி நாகை கிளைப் பொறுப்பாளா்கள் பி. சுரேஷ், ஜி. அன்பழகன், திருத்துறைப்பூண்டி கிளைச் செயலாளா் தேஸ்வரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com