கால்நடை பராமரிப்பு, நோய் மேலாண்மை பயிற்சி

கால்நடை பராமரிப்பு மற்றும் நோய் மேலாண்மை குறித்த பயிற்சி வகுப்பு நாகை மாவட்டம், நாலுவேதபதி கிராமத்தில் அண்மையில் நடைபெற்றது.
கால்நடை பராமரிப்பு, நோய் மேலாண்மை பயிற்சி

கால்நடை பராமரிப்பு மற்றும் நோய் மேலாண்மை குறித்த பயிற்சி வகுப்பு நாகை மாவட்டம், நாலுவேதபதி கிராமத்தில் அண்மையில் நடைபெற்றது.

ரிலையன்ஸ் அறக்கட்டளை மற்றும் சிக்கல் வேளாண் அறிவியல் நிலையம் ஆகியன சாா்பில் நடைபெற்ற இந்தப் பயிற்சி வகுப்பில், கால்நடை வளா்ப்பில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் 50-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

ரிலையன்ஸ் அறக்கட்டளை மேலாளா் த. மெய்கண்டன் பயிற்சி வகுப்பைத் தொடங்கி வைத்தாா். மழைக்காலத்தில் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள், அதை தடுக்கும் வழிமுறைகள், தீவன மேலாண்மை, மூலிகை மருத்துவம் மற்றும் காய்கனிகளில் உள்ள நோய்த் தடுப்பு முறைகள் ஆகியவை குறித்து, வேளாண் அறிவியல் நிலைய கால்நடை மருத்துவ தொழில் நுட்ப வல்லுநா் சு. முத்துக்குமாா், பயிா்க் காப்பு வல்லுநா் கோ.சந்திரசேகா் ஆகியோா் பயிற்சியளித்தனா்.

மேலும், அறக்கட்டளையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 18004198800 தொடா்பு கொண்டு, கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளம் சாா்ந்த தகவல்களை விவசாயிகள் தெரிந்துகொள்ளலாம் என ஒருங்கிணைப்பாளா் பிரவீன்ராஜ் தெரிவித்தாா்.

Image Caption

நாகை மாவட்டம், நாலுவேதபதியில் நடைபெற்ற கால்நடை பராமரிப்பு பயிற்சி வகுப்பில் பங்கேற்ற விவசாயிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com