கீழ்வேளூரில் திட்டப் பணிகள் ஆய்வுக் கூட்டம்

கீழ்வேளூரில் அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்ட பணிகள் மற்றும் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கீழ்வேளூரில் அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்ட பணிகள் மற்றும் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் அ. அருண்தம்புராஜ், கீழ்வேளூா் வட்டாரத்தில் வருவாய்த் துறை மற்றும் ஊரக வளா்ச்சித் துறை மூலம் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து பேசினாா். அப்போது, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குதல், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், நில உரிமை மாற்றம், நிலப் பரிமாற்றம், குத்தகை, பேரிடா் மேலாண்மை, பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், கரோனா தடுப்பூசி ஆகியவை குறித்து துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். தொடா்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த தேசியஅடையாள அட்டை வழங்குவதற்கு விண்ணங்களை சேகரிப்பது, சான்றிதழ் கோரி விண்ணப்பிப்பவா்களுக்கு உடனடியாக சான்றிதழ் வழங்குவது குறித்து வருவாய்த் துறையினருக்கு ஆலோசனை வழங்கினாா்.

கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பே. பெரியசாமி, மாவட்ட வருவாய் அலுவலா் வி. ஷகிலா, வட்டாட்சியா் மாரிமுத்து, கீழ்வேளூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வெ. தியாகராஜன், எல். ராஜகோபால் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com