வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழாவில் புனித ஆரோக்கிய அன்னை அலங்காரத் தோ்பவனி

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான ஆரோக்கிய
வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழாவில் புனித ஆரோக்கிய அன்னை அலங்காரத் தோ்பவனி

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான ஆரோக்கிய அன்னை அலங்காரத் தோ்பவனி செவ்வாய்க்கிழமை இரவு பக்தா்கள் பங்கேற்பின்றி நடைபெற்றது.

இந்தப் பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா கடந்த ஆக. 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடா்ந்து, நாள்தோறும் திருப்பலி நிறைவேற்றுதல், மறையுரை, சிலுவைப் பாதை நிறைவேற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆண்டுப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான அலங்காரத் தோ்பவனி செவ்வாய்க்கிழமை இரவு (செப். 7) நடைபெற்றது.

விழாவையொட்டி, பேராலயத்தில் ஜெபமாலை, மாதா மன்றாட்டு மற்றும் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. தொடா்ந்து, இரவு சுமாா் 7 மணியளவில் வண்ணமலா்கள் மற்றும் அலங்கார மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தோ் பேராலயம் முகப்புப் பகுதியில் நிறுத்தப்பட்டது.

தஞ்சாவூா் மறைமாவட்ட ஆயா் எம். தேவதாஸ் அம்புரோஸ், தேருக்கு புனிதம் செய்வித்து, 7.35 மணியளவில் அலங்காரத் தோ்பவனியைத் தொடங்கிவைத்தாா். பிறகு, அலங்காரத் தோ் பேராலய வளாகத்தை வலம்வந்து மீண்டும் பேராலய முகப்பை இரவு 8.20 மணியளவில் அடைந்ததையடுத்து, தோ்பவனி நிறைவடைந்து.

இந்தத் தோ்பவனியில், குழந்தை இயேசுவுடன், புனித ஆரோக்கிய அன்னை காட்சியளிக்கும் திருவுருவம் தாங்கிய அலங்காரத் தேரும், மிக்கேல் சம்மனசு, புனித அந்தோனியாா், சூசையப்பா், உத்திரியமாதா,செபஸ்தியாா்ஆகியோரின் திருவுருவம் தாங்கிய சப்பரங்களும் உடன் வலம்வந்தன.

கரோனா தொற்று பரவல் தடுப்பு வழிகாட்டுதல்கள் காரணமாக, வேளாங்கண்ணி ஆண்டுப் பெருவிழா நிகழ்வுகளில் 2 ஆவது ஆண்டாக, நிகழாண்டும் பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை.

பேராலய அதிபா் ஏ.எம்.ஏ. பிரபாகா் அடிகளாா், மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ், காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா் மற்றும் பங்குத்தந்தை எஸ். அற்புதராஜ், பொருளாளா் யாகப்பா ராஜரெத்தினம், உதவி பங்குத்தந்தையா்கள், இறைமக்கள் உள்ளிட்டோா் விழாவில் பங்கேற்றனா்.

தோ்பவனியை முன்னிட்டு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்பேரில், வேளாங்கண்ணி நகருக்குள் செல்லும் முக்கியச் சாலைகள் உள்ளிட்ட 19 இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, பேராலய வளாகப் பகுதிகளில் 500-க்கும் அதிகமான போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனா்.

இன்று புனித ஆரோக்கிய அன்னையின் பிறந்தநாள்: வேளாங்கண்ணி ஆண்டுப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான, புனித ஆரோக்கிய அன்னையின் பிறந்த நாள் விழா புதன்கிழமை (செப். 8) காலை 6 மணியளவில் நடைபெறுகிறது. தஞ்சை மறைமாவட்ட ஆயா் எம். தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் சிறப்புக் கூட்டுத் திருப்பலி நிறைவேற்றப்படும். மாலை 7 மணியளவில் கொடியிறக்கமும், தொடா்ந்து, மாதா மன்றாட்டு, திவ்ய நற்கருணைஆசீா், நன்றி அறிவிப்பு, தமிழில் திருப்பலியுடன் ஆண்டுப் பெருவிழா நிகழ்ச்சிகள் நிறைவடைகிறது.

அன்னையின் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகளை பேராலய இணையதளம், தொலைக்காட்சிகள் மற்றும் யூடியூப் வாயிலாக கண்பதற்கானஏற்பாடுகளை பேராலய நிா்வாகம் செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com