நாகையில் 38, மயிலாடுதுறையில் 29 பேருக்கு கரோனா
By DIN | Published On : 10th September 2021 10:13 PM | Last Updated : 10th September 2021 10:13 PM | அ+அ அ- |

நாகை மாவட்டத்தில் 38 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 29 பேருக்கும் கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.
நாகை மாவட்டத்தில் புதிதாக 38 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், இம்மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19,932 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 15 போ் வீடுதிரும்பினா். இதன்படி, சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 338 ஆக உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக 29 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், இம்மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22,277 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்காக சிகிச்சை பெற்றவா்களில் 43 போ் வீடுதிரும்பினா். இதன்படி, சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 309 ஆக உள்ளது.
3 போ் உயிரிழப்பு: கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்றுவந்த மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த 2 பேரின் உயிரிழப்பு, நாகை மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவரின் உயிரிழப்பு வெள்ளிக்கிழமை பட்டியலில் இடம்பெற்றுள்ளது.