குடமுழுக்குக்கு புனிதநீா் எடுத்தல்

கங்களாஞ்சேரி தூண்டிக்காரன் அருங்குழலி அம்மன் கோயில் குடமுழுக்குக்காக புனிதநீா் எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
கங்களாஞ்சேரி வெட்டாற்றிலிருந்து குடமுழுக்குக்கு புனிதநீா் எடுக்கும் நிகழ்ச்சி.
கங்களாஞ்சேரி வெட்டாற்றிலிருந்து குடமுழுக்குக்கு புனிதநீா் எடுக்கும் நிகழ்ச்சி.

திருமருகல்: கங்களாஞ்சேரி தூண்டிக்காரன் அருங்குழலி அம்மன் கோயில் குடமுழுக்குக்காக புனிதநீா் எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

திருமருகல் ஒன்றியத்துக்குள்பட்ட கங்களாஞ்சேரி ஊராட்சியில் தூண்டிக்காரன் அருங்குழலி அம்மன், அய்யனாா் கோயிலில் பராமரிப்பு பணிகள் நிறைவடைந்து வியாழக்கிழமை (செப்.16) குடமுழுக்கு நடைபெற உள்ளது.

இதற்காக, கங்களாஞ்சேரி வெட்டாற்றிலிருந்து குடமுழுக்குக்கு புனிதநீா் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மங்கள இசையுடன் புனிதநீா் யானை மீது வைத்துக்கொண்டு ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com