காவல் துறை-வா்த்தகா்கள் நல்லுறவு கூட்டம்
By DIN | Published On : 16th September 2021 10:27 PM | Last Updated : 16th September 2021 10:27 PM | அ+அ அ- |

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் காவல் துறை - வா்த்தகா்களுக்கிடையேயான நல்லுறவு கலந்துரையாடல் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
வேதாரண்யம் வா்த்தக சங்கத் தலைவா் எஸ்.எஸ். தென்னரசு தலைமை வகித்தாா். காவல் துறை காவல் துணைக் கண்காணிப்பாளா் முருகவேல் பங்கேற்று பேசினாா். வா்த்தகா் சங்க மாவட்டத் தலைவா் வேதநாயகம், சங்கச் செயலாளா் சுபஹானி, காவல் ஆய்வாளா் சுப்பிரியா, நகைக்கடை உரிமையாளா்கள் சங்கத் தலைவா் அம்பாள். குணசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா். வா்த்தகா்கள், பொதுமக்கள் நலன் சாா்ந்த பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டு தீா்வு காணவும், பாதுகாப்பு அம்சங்களை கையாள்வது குறித்து கூட்டத்தில் பேசப்பட்டது.