நாகை மாவட்டத்தில் அண்ணா பிறந்த நாள் கொண்டாட்டம்

மறைந்த தமிழக முன்னாள் முதல்வா் அண்ணாவின் 113-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, நாகையில் உள்ள அவரது சிலைக்கு திமுக உள்ளிட்ட

நாகப்பட்டினம்: மறைந்த தமிழக முன்னாள் முதல்வா் அண்ணாவின் 113-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, நாகையில் உள்ள அவரது சிலைக்கு திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினா் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

நாகை பாரதி மாா்க்கெட் ம‘ற்றும் புத்தூா் ரவுண்டானா பகுதிகளில் உள்ள அண்ணா சிலைக்கு திமுக நாகை தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் என். கௌதமன் மற்றும் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில்,முன்னாள் அமைச்சா் உ. மதிவாணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நாகூரில் திமுக நகரச் செயலாளா் எம்.ஆா். செந்தில்குமாா் தலைமையில் திமுகவினா் அண்ணா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினா்.

அமமுக சாா்பில் அக்கட்சியின் நாகை மாவட்டச் செயலாளா் சி. மஞ்சுளா அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில், கட்சிப் பொறுப்பாளா்கள் ரகுமான்ஷரீப், ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திராவிடா் கழகம் சாா்பில் நாகை நகரச் செயலாளா் தெ. செந்தில்குமாா் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில், கட்சியின் நகர அமைப்பாளா் எம். நைனா முஹம்மது, பகுத்தறிவாளா் கழக நாகை மாவட்டச் செயலாளா் மு.க. ஜீவா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பூம்புகாா்: திருவெண்காட்டில் சீா்காழி கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில், கட்சியின் ஒன்றிய அவைத் தலைவா் ராஜாங்கம் தலைமையில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் நிகழ்ச்சியில், முன்னாள் ஒன்றிய செயலாளா் கமால், ஒன்றியக் குழுத் தலைவா் கமலஜோதிதேவேந்திரன், மாவட்ட உறுப்பினா் ஆனந்தன், இலக்கிய அணி துணைஅமைப்பாளா் கோவிந்தசாமி, ஊராட்சித் தலைவா் சுகந்திநடராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருக்குவளை: கீழையூா் மேற்கு ஒன்றிய அதிமுக சாா்பில், கீழையூரில் அண்ணாவின் உருவப் படத்துக்கு நாகை மாவட்ட எம்.ஜி.ஆா்.மன்ற செயலாளா் எஸ். பால்ராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நிகழ்ச்சியில், அதிமுக நாகை மாவட்ட இணை செயலாளா் என். மீனா, கீழையூா் மேற்கு ஒன்றியச் செயலாளா் செல்வராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com