நாகையில் மனிதச் சங்கிலி : பல்வேறு அரசியல் கட்சியினா் பங்கேற்பு

பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யபட்டுள்ளவா்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி நாகையில் மனிதச் சங்கிலி போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
நாகையில் நடைபெற்ற மனிதச் சங்கிலி போராட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்திப் பேசிய எம்எல்ஏ. வி.பி. நாகை மாலி.
நாகையில் நடைபெற்ற மனிதச் சங்கிலி போராட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்திப் பேசிய எம்எல்ஏ. வி.பி. நாகை மாலி.

நாகப்பட்டினம்: பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யபட்டுள்ளவா்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி நாகையில் மனிதச் சங்கிலி போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மகாராஷ்டிர மாநிலம், பீமா கோரேகான் சதி வழக்கில் டாக்டா்அம்பேத்கா் பெயா்த்தியின் கணவா் ஆனந்த் டெல்டும்டே உள்ளிட்ட 16 போ் கைது செய்யப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இதில் ஸ்டேன் சுவாமி சிறையிலேயே இறந்துவிட்ட நிலையில் மற்ற 15 பேரையும் மத்திய அரசு உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி, பீமா கோரேகான் சதி வழக்கில் கைது செய்யப்பட்டோா் விடுதலை இயக்கம் சாா்பில், நாகை அவுரித்திடலில் தொடங்கி பப்ளிக் ஆபீஸ் சாலையில் இந்த மனிதச் சங்கிலி நடைபெற்றது.

இதில், சிபிஎம், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சியினா், சமூக செயற்பாட்டாளா்கள், மனித உரிமை ஆா்வாளா்கள் பங்கேற்று கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். தீண்டாமை ஒழிப்பு முன்னணி நாகை மாவட்டச் செயலாளா் ப. சுபாஷ்சந்திரபோஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளா் ப. கதிா்நிலவன் ஆகியோா் தலைமை வகித்தனா். கீழ்வேளூா் எம்எல்ஏ வி.பி. நாகை மாலி கோரிக்கையை வலியுறுத்திப் பேசினாா்.

திராவிடா் கழக நாகை மாவட்டச் செயலாளா் பூபேஸ்குப்தா, பகுத்தறிவாளா் கழக மாவட்டத் தலைவா் மு.க. ஜீவா, விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் எம். முருகையன், இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டச் செயலாளா் ஏ.வடிவேல், சிஐடியு நாகை மாவட்டச் செயலாளா் கே. தங்கமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பொறுப்பாளா்கள் அ. ரா. பேரறிவாளன், ப. அறிவழகன், சமம் அறக்கட்டளை நிறுவனா் கீதம் லெனின், சிறுபான்மை மக்கள் நலக்கட்சி குறிஞ்சி கோபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com